ஸ்ரீநகர்,
காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளியொன்றில் புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளியின் பெண் முதல்வர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என 2 பேரை கொடூர கொலை செய்தனர்.
இதேபோன்று, கடந்த செவ்வாய் கிழமை 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 48 மணிநேரத்திற்குள் பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் 7 பேர் வரை படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதனால், உள்துறை அமைச்சக அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ஷாகுந்த் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஒருவரை படையினர் சுட்டு கொன்றனர்.
அந்த பயங்கரவாதி இம்தியாஸ் அகமது தார் என அடையாளம் காணப்பட்டு உள்ளார் என காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்து உள்ளார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் சமீபத்திய பொதுமக்கள் படுகொலையுடன் தொடர்புடைய பயங்கரவாதி இம்தியாஸ் என தெரிய வந்துள்ளது.