தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் 2 கட்சி தொண்டர்களிடையே மோதல்; 16 பேர் காயம்

ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீகாகுளம்,

ஆந்திர பிரதேசத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்புடைய சமூக ஊடக பதிவுகளால் தெலுங்கு தேசம் மற்றும் யுவஜன ஸ்ரமிகா ரித்து காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிடையே மோதல் உருவானது.

இதில் ஸ்ரீகாகுளம் நகரில் மெட்டவலசா கிராமத்தில் இரு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 16 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து கிராமத்தில் வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது என துணை ஆய்வாளர் அகமது கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு