மைசூரு,
மைசூரு தாலுகா நக்குவினஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரீதம் (வயது 16). கல்லூரி மாணவரான இவர் மைசூரு ரெயில் நிலையத்திற்கு வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரெயில் மீது ஏறினார். பின்னர் ரெயில் மேல் நின்று கொண்டு தனது செல்போனில் இருந்து பல்வேறு கோணங்களில் செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது உயர் அழுத்த கம்பியில் அவரது கைபட்டுவிட்டது. இதில் மின்சாரம் தாக்கி வீசப்பட்ட பிரீதம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்து ரெயில் நிலையத்தில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.