தேசிய செய்திகள்

மும்பையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக 41 தடுப்பூசி மையங்கள் மூடல்

மும்பையில் நேற்றைய தினம் 45 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினத்தந்தி

மும்பை,

மும்பையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 120 மையங்களில் 75 மையங்கள் மட்டும் செயல்பட்டன. மற்ற அனைத்து மையங்களும் மூடப்பட்டன. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியதை அடுத்து தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்த்தப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி அந்த மையங்களில் 41 மையங்கள் மூடப்பட்டு இருந்தன. அதாவது 70 சதவீத மையங்கள் மட்டுமே செயல்பட்டதாக மாநகராட்சி தெரிவித்தது. இதன் காரணமாக மும்பையில் உள்ள தடுப்பூசி மையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று 45 ஆயிரத்து 326 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதில் 2 ஆயிரத்து 233 பேர் 2-வது டோஸ் பெற்றுக்கொண்டனர். தற்போதைய மருந்து இருப்பு நிலவரப்படி நாளை (புதன்கிழமை) வரை தடுப்பூசி போட முடியும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரம் தெரிவித்தது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை