பாராமுல்லா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் ரபியாபாத் நகரில் பெரிய அளவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவர்களின் உடல்களை காஷ்மீர் பேரிடர் மேலாண் கழகம் மீட்டு உள்ளது. காணாமல் போன ஒருவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
இதனையடுத்து போலீஸ் துணை ஆணையாளர் சம்பவ பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொடர்புடைய குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.