தேசிய செய்திகள்

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேட்பு மனு தாக்கல்; தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார்

கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 85 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தினத்தந்தி

முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் காலை 11 மணியளவில் கண்ணூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட துணை வளர்ச்சி ஆணையர் பெவின் ஜான் வர்கீசிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு பினராயி விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களிடம் இருந்து கிடைத்து வரும் பேராதரவின் பின்பலத்தோடு இடதுசாரி முன்னணி தேர்தல் களத்தை சந்திக்கிறது. பொதுமக்களின் நன்மைக்காக கடந்த 5 ஆண்டுகள் செயல்படுத்தி வந்த அதே வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் உத்வேகத்துடன் முன்னோக்கி கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை