சென்னை
நேற்று இரவு மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தென் அமெரிக்க கண்டத்தில் செயல்படும் போதைப்பொருள் கும்பகலுக்கு பணிபுரிபவராகவும் அடையாளம் கண்டுள்ளனர் அதிகாரிகள்.
விஷால் (27) எனும் இளைஞர் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர்; காவல் துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து டெல்லி செல்லும் ரயிலில் ஏறவிருந்த அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விஷாலின் முதுகுப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 10 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விஷாலுக்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் போதைப்பொருளை கையளித்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக மண்டல போதைப் பொருள் கண்காணிப்புத்துறைத் தலைவர் புரூனோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.