தேசிய செய்திகள்

ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்து கலெக்டர் முடிவு எடுக்க வேண்டும்- கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் முடிவு எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு:-

ஈத்கா மைதானத்தில் விநாயகர்...

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி சாம்ராஜ்பேட்டை குடியிருப்போர் சங்கம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த 12-ந் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வரலே முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் ஸ்ரீதர் பிரபு ஆஜராகி வாதிட்டார்.

கலெக்டர் முடிவு இறுதியானது

அப்போது விநாயகர் சதுர்த்தி கடந்த 18-ந் தேதி முடிந்து விட்டது. அதன்பிறகு, விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். உடனே வக்கீல் ஸ்ரீதர் பிரபு, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட 22-ந் தேதி (அதாவது இன்று) முதல் வருகிற 24-ந் தேதிக்குள் ஏதாவது ஒரு நாள் அனுமதி வழங்கும்படிதான் மாவட்ட கலெக்டரிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ஈத்கா மைதானத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி கொடுப்பது குறித்து மாவட்ட கலெக்டர் தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கலெக்டரின் முடிவே இறுதியானது. அதனால் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பது குறித்து மாவட்ட கலெக்டரே முடிவு எடுத்து மனுதாரர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.பி.வரலே உத்தரவிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு