தேசிய செய்திகள்

கல்லூரி மாணவி கற்பழித்து கொலை; 2 வாலிபர்களுக்கு மரண தண்டனை

கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 வாலிபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

சிக்மகளூரு,

கர்நாடக மாநிலம் சிருங்கேரி தாலுகா வைகுண்டாபுரத்தை சேர்ந்தவர்கள் பிரதீப் (வயது 32), சந்தோஷ் (24). இவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி, கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றனர். பிறகு அவரது உடலை ஒரு கிணற்றில் வீசினர்.

மாணவியின் தந்தை புகாரின்பேரில், சிருங்கேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதீர் ஹெக்டே விசாரணை நடத்தினார். இந்த வழக்கை விசாரித்த சிக்மகளூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உமேஷ் அடிகா, 2 வாலிபர்களுக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து