தேசிய செய்திகள்

சீன தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகள் தொடக்கம்; டெல்லியில் உள்ள சீன தூதரகம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் இந்தியர்கள் சீனா செல்வதற்கான விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

இந்த நிலையில் சீன தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு விசா வழங்க தொடங்கியிருப்பதாக டெல்லியில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. வர்த்தகம், மனிதாபிமானத் தேவைகள், குடும்ப ஒன்றுகூடல் ஆகிய காரணங்களுக்காகச் சீனா செல்ல விரும்புவோருக்கும் அது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மார்ச் 15 முதல் இந்தியாவில் உள்ள மக்கள் பரிமாற்றங்களை மீண்டும் தொடங்குவதற்கான நோக்கத்திற்காக இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மற்றும் துணை தூதரகங்கள் சீனா தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்களுக்கும், தடுப்பூசி சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கும் விசா வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு