தேசிய செய்திகள்

பிறந்தநாளில் ஆசிரியைக்கு உள்ளாடை பரிசு வீட்டு உரிமையாளர் மீது புகார்

பிறந்தநாளில் ஆசிரியைக்கு உள்ளாடை பரிசு வீட்டு உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்ப்ட்டு உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு

பெங்களூரு அனுமந்தநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவருக்கு சொந்தமான வீட்டில் 42 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஆசிரியை தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் கலந்து கொண்ட பத்மநாபா, ஆசிரியைக்கு ஒரு பரிசு அளித்தார். அந்த பரிசை ஆசிரியை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி காத்து இருந்தது. அதாவது பத்மநாபா உள்ளாடையை பரிசாக அளித்து இருந்தார்.

இந்த நிலையில் ஆசிரியையை தொடர்பு கொண்டு பேசிய பத்மநாபா தான் பரிசாக அளித்த உள்ளாடையை அணிந்து காட்டும்படி கூறியதாக தெரிகிறது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை பத்மநாபா மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்