புதுடெல்லி
பரபரப்பான அரசியல் சூழலில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. வரும் 13-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளிலும் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றி வருகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நாடு முழுவதும் 9 கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
* இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விரைவிலேயே மின்சாரம் இல்லாத வீடே இல்லை எனும் நிலை உருவாக்கப்படும்.
* இவையனைத்துக்கும் மேலாக பொது பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.
* ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ், 34 கோடி மக்கள் வங்கிக் கணக்கை ஆரம்பித்துள்ளனர்; நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தாரும் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
* சர்வதேச நிறுவனத்தின் சர்வேபடி, 2014-2017 இடையே திறந்த மொத்த வங்கிக் கணக்குகளில் 55 சதவீதம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளன.
* ஜி.எஸ்.டி என்பது ஒரு நீண்டகாலக் கொள்கையாகும் மற்றும் வணிகத் துறைக்கு அது ஒரு வரம் ஆகும். நாட்டில் வரி செலுத்துவோர் இந்த அரசாங்கத்தை நம்புகிறார்கள்.
* கட்டுமான துறையில் வாய்ப்பு அதிகரித்து உள்ளதால், வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
* முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும். முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு உறுதியாக உள்ளது.
* வாஜ்பாய் அறிமுகப்படுத்திய சாலைகள் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து செல்கிறது.
* விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்ததன் மூலம் நமது வீரர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
* பாதுகாப்பு தேவைகளில் சமரசம் செய்வது நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால நலன்களுக்கு நல்லது அல்ல.
* கடந்த ஆண்டு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு மனப்பான்மையை வளர்த்தது.
* பல சதாப்தங்களுக்குப் பிறகு, இந்திய விமானப்படை வரவிருக்கும் மாதங்களில் அல்ட்ராமோடென்ட் ரபேல் விமானத்தை பயன்படுத்தும் மற்றும் தன்னை பலப்படுத்துகிறது என கூறினார்.