தேசிய செய்திகள்

திருமணமாகாத பெண்கள் மத்தியில் கருத்தடை சாதனம் பயன்பாடு 6 மடங்கு அதிகரிக்கிறது

திருமணம் ஆகாத பெண்களில், கருத்தடை சாதனம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்ந்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. #NationalFamilyHealthSurvey

புதுடெல்லி

மத்திய சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. குறிப்பாக காண்டம் பயன்படுத்தும் பெண்களில் 20-24 வயதுடையோர் அதிகம் உள்ளனர். திருமணம் ஆகாத பெண்களும், பாலியல் தொழில் செய்யும் பெண்களும் பாதுகாப்பான முறையில் பாலுறவு செய்ய விரும்புகின்றனர்.

8 ஆண்களில் 3 பேர் கருத்தடை என்பது பெண்களின் பொறுப்பு என்று எண்ணுகிறார்கள். ஆண்கள் பாதுகாப்பான உறவு குறித்து கவலை கொள்வதில்லை என்றும் ஆய்வில் தெரிகிறது. பெரும்பாலான பெண்கள் நவீன கருத்தடை முறைப் பற்றி அறிந்திருக்கவில்லை. பழைய முறையையே பின்பற்றுகிறார்கள்.

99 சதவீதம் ஆண்கள் மற்றும் பெண்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு கருத்தடை முறையை பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். 15-49 வயதுடைய திருமணமான பெண்களில் 54 சதவீதம் பேர் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். 32 சதவீதம் பேர் நவீன கருத்தடை முறைகளை பயன்படுத்துகின்றனர்.

பாலுறவில் ஈடுபடும் 15-49 வயதுடைய பெண்களில் காண்டம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2 சதவீதத்தில் இருந்து (2005-06) 12 சதவீதம் ஆக (2015-16) உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...