கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

2024 பிரதமர் தேர்தலை குறிவைக்கும் காங். பிகே அனுப்பிய ரிப்போர்ட்.. ஏற்பாரா சோனியா?

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் திட்டங்களை சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோர் வகுத்துக்குடுத்துள்ளார்.

புதுடெல்லி,

தேர்தல் நிபுனரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தயாரித்துக்கொடுத்த வியூகங்களின் அறிக்கை சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், அடுத்த கட்ட நடவடிக்கையில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலை நோக்கி காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை உள்ளது.

இதற்கிடையே தேர்தல் வியூக நிபுனர் பிரஷாந் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தியதுடன், கட்சியை பலப்படுத்துவது குறித்தும் விவரித்துள்ளார்.

குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்து குறித்த அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், கட்சியில் செய்யவேண்டிய மாற்றுத்திட்டங்களை வகுத்துக்கொடுத்துள்ளார்.

அதனை ஆராய 3 பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி நியமித்துள்ள நிலையில், இறுதி அறிக்கை தயாராகியுள்ளது. சோனியா காந்தியிடம் பிரஷாந்த் கிஷோரின் வியூகங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விரைவில் கட்சிக்குள் அழைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்