தேசிய செய்திகள்

வாஜ்பாய் மறைவுக்கு மாநகராட்சியில் இரங்கல் தீர்மானம்: எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலருக்கு அடி-உதை

வாஜ்பாய் மறைவுக்கு மாநகராட்சியில் இரங்கல் தீர்மானதிற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தினத்தந்தி

அவுரங்காபாத்,

மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் நந்தகுமார் கோட்லே கொண்டு வந்தார். இதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை சேர்ந்த கவுன்சிலர் சையத் மதீன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜனதா கவுன்சிலர்கள், சையத் மதீன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். உடனே மாநகராட்சியின் காவலாளிகள், கவுன்சிலர் சையத் மதீனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு