தேசிய செய்திகள்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் வாழ்த்து

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு, சிராக் பஸ்வான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டது. நிதிஷ்குமாரை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்று கூறிய அக்கட்சி, தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதள வேட்பாளர்களின் வெற்றியைத் தடுத்தது. ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியால், நிதிஷ்குமார் 7-வது முறையாக பீகார் முதல்-மந்திரியாக நேற்று பதவியேற்றார்.

இந்நிலையில் சிராக் பஸ்வான் நேற்று டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாரை நான் வாழ்த்துகிறேன். இந்த அரசு இதன் முழு பதவிக்காலத்தை பூர்த்திசெய்யும் என்றும், நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரியாக நீடிப்பார் என்றும் நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதனுடன் தனது கட்சியின் தேர்தல் அறிக்கைக்கான இணைப்பையும் வெளியிட்டுள்ள சிராக் பஸ்வான், அதில் உள்ள சில வாக்குறுதிகளை நிதிஷ்குமார் நிறைவேற்றுவார் என்று கருதுவதாக கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்