புதுடெல்லி,
கடலோர காவல் படை நிறுவிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
இந்திய கடலோர காவல் படைக்கு வாழ்த்துக்கள். இந்திய கடலோர காவலர்கள் தேசத்தை பாதுகாத்து வருகிறார்கள். கடலோர பாதுகாப்பு மட்டுமின்றி கடல்சார் வளத்தை பாதுகாப்பதிலும் இந்திய கடலோர காவல்படை சிறந்து உதவுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.