தேசிய செய்திகள்

பாரதீய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியும் சவாலை காங்கிரஸ் ஏற்கிறது: கமல் நாத்

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை தூக்கியெறியும் சவாலை காங்கிரஸ் கட்சி ஏற்று கொள்கிறது என அக்கட்சியின் எம்.பி. கமல் நாத் கூறியுள்ளார்.

இந்தூர்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சிந்த்வாரா தொகுதியின் எம்.பி.யான கமல் நாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, பாரதீய ஜனதாவின் பதிமூன்றரை ஆண்டு ஆட்சியின் கீழ் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் மற்ற பிரிவினர்கள் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளனர் என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, மாநிலத்தின் நன்மைக்காக பாரதீய ஜனதா அரசை தூக்கியெறியும் சவாலை நாங்கள் ஏற்று கொள்கிறோம். காங்கிரஸ் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் பாரதீய ஜனதாவின் உண்மை முகத்தினை பற்றி தெரிவிக்கும் என்றும் கூறினார்.

சமீபத்தில் நடந்த வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 விவசாயிகள் பலியான சம்பவத்தினை குறிப்பிட்டு பேசிய அவர், அனைத்து பிரிவு மக்களும் தற்பொழுது முதல் மந்திரியின் ஏமாற்றுத்தனத்தினை புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்