தேசிய செய்திகள்

நாடாளுமன்றம், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வசூலித்தது ரூ.856 கோடி; செலவழித்தது ரூ.820 கோடி

நாடாளுமன்றம் மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வசூலித்தது ரூ.856 கோடி என்றும் செலவழித்தது ரூ.820 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி நாடாளுமன்றத்துக்கும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் செய்யப்பட்ட செலவு கணக்கு விவரங்களை காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த தேர்தல் காலத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.856.2 கோடி நிதி திரட்டியது. இதில் பிரசாரத்துக்காக ரூ.820.9 கோடி செலவழித்தது. கட்சியின் பொது பிரசாரத்துக்கு ரூ.626.36 கோடியும், வேட்பாளர்களுக்காக ரூ.194 கோடியும் செலவழிக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கு பின்னர் கட்சியின் நிதியாக ரூ.315.88 கோடி உள்ளது. இதில் ரூ.265 கோடி வங்கி கணக்கிலும், ரூ.50 கோடி கையிருப்பு பணமாகவும் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ரூ.316 கோடி செலவழித்தது குறிப்பிடத்தக்கது. ஆளும் பா.ஜனதா கட்சி இன்னும் தனது செலவு கணக்கை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யவில்லை.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு