தேசிய செய்திகள்

பிரதமர் மன்னிப்பு கேட்க கோரி பாராளுமன்றத்தில் 5-வது நாளாக காங்கிரஸ் போராட்டம்

மன்மோகன் சிங் மீதான குற்றச்சாட்டு பிரதமர் மன்னிப்பு கேட்க கோரி பாராளுமன்றத்தில் 5-வது நாளாக காங்கிரஸ் போராட்டம் . டெல்லி மேல்-சபை 27-ந்தேதி வரை ஒத்தி வைக்கபட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீது குற்றம்சாட்டி இருந்தார். குஜராத் சட்டசபை தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் தூதருடன் மன்மோகன்சிங் ஆலோசனை நடத்தினார் என்று குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் சதி திட்டம் தீட்டுவதாக கூறி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி பாராளுமன்றத்தின் இரு அவையிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடி மன்னிப்பு கேட்க மாட்டார் என்று டெல்லி மேல்-சபை தலைவர் வெங்கையாநாயுடு தெரிவித்து இருந்தார்.

நேற்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சல் -குழப்பத்தால் டெல்லி மேல்-சபையில் நியமன எம்.பி.யான சச்சின் தெண்டுல்கரின் கன்னி பேச்சு தடைப்பட்டது.

டெல்லி மேல்-சபையில் இன்று 6-வது நாளாக காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சல்- குழப்பத்தில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக டெல்லி மேல்-சபை வருகிற 27-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது