இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பூபேந்தர் யாதவ், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், சமூக, பொருளாதார நீதி அடிப்படையில் சமத்துவ சமுதாயம் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இது. இதற்காக பிரதமர் மோடியை பா.ஜ.க. பாராட்டுகிறது என தெரிவித்தார்.
அதே நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை சாடினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் எதுவுமே செய்யவில்லை என குறிப்பிட்டார்.