ஆமதாபாத்
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா மீது ராஜஸ்தான் மாநிலம் கங்காபூர் போலீசில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. இவ்வழக்கில் அவரை கைது செய்ய ராஜஸ்தான் மாநில கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து அம்மாநில போலீஸ் குஜராத் போலீசுடன் பிரவீன் தொகாடியாவின் வீட்டிற்கு சென்றபோது அவரை காணவில்லை. நேற்று காலை 10:45 மணியளவில் அலுவலகத்தில் இருந்து ஆட்டோவில் சென்ற அவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கைது செய்துவிட்டது என அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினார், ஆனால் போலீஸ் நாங்கள் கைது செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.
பிரவீன் தொகாடியாவை காணவில்லை என்றதும் அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பிரவின் தொகாடியா செய்தியாளர்களிடம் கூறுகையில் ராஜஸ்தான், குஜராத் போலீசார் என்னை மிரட்டினர், போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்கவே எனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தேன். மத்திய அரசு என் குரலை ஒடுக்க பார்க்கிறது, பொய்யான வழக்கில் எனக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
அவரை காங். மூத்த தலைவர் அர்ஜூன் மவுத்வாடியா நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் பட்டிதார் இன தலைவரான ஹர்தீக் பட்டேலும் சந்தித்து பேசினார்.
இதேபோல் குஜராத் பட்டேல் இன தலைவர் ஹரதிக் படேலும் சந்தித்து பேசினார்.