தேசிய செய்திகள்

சபாநாயகர் ஓம்.பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் நோட்டீஸ்

பிரதமரை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி செய்ததாக கூறியதால் சர்ச்சைக்குள்ளானார் ஓம்.பிர்லா.

புதுடெல்லி,

மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் நம்பிக்கையிலா தீர்மானம் அளித்தனர். 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் மக்களவை செயலரிடம் காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக்கோரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் கடிதம் அளித்துள்ளனர். சபாநாயகர் ஓம்.பிர்லாவின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மக்களவை விதிகள் 94 சி-ன் கீழ் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக கவுரவ் கொகோய் தகவல் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பதவியில் இருந்து ஓம்.பிர்லாவை நீக்க கோரி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளனர்.

பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் முயற்சித்தனர் என ஓம்.பிர்லா குற்றம்சாட்டியிருந்தார்.