தேசிய செய்திகள்

'வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர், தலித்துகளை காங்கிரஸ் பயன்படுத்துகிறது' - சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

விவசாயிகள் நலனில் காங்கிரசுக்கு அக்கறை இல்லை என்று சந்திரசேகர ராவ் விமர்சித்தார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் வனபர்த்தி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், விவசாயிகள் நலனில் காங்கிரசுக்கு அக்கறை இல்லை என விமர்சித்தார்.

மேலும் நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதிலும், தலித்துகளின் நலனுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தியதில்லை எனவும், வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர், தலித்துகளை காங்கிரஸ் பயன்படுத்துகிறது என்றும் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்