தேசிய செய்திகள்

காங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது - ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து

காங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது என ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து தெரிவித்தது.

புதுடெல்லி,

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் பற்றி தனது பிரசாரத்துக்காக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தது குறித்து பா.ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறும்போது, இது ராகுல் காந்தியின் நம்பகத்தன்மைக்கு கிடைத்த அடி. பொதுவாழ்வில் மக்கள் சில நேரங்களில் உண்மையற்றதை சொல்வார்கள். ஆனால் அதையே திரும்பத் திரும்ப சொல்வது தான் வருத்தத்திற்குரியது. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவர் பொய்யை மட்டுமே நம்பியுள்ளார் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளதுடன், தான் கூறியது பொய் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரஸ் என்றால் பொய் என்றும், ரபேல் என்றால் ராகுலின் தோல்வி என்றும் அர்த்தமாகிறது என்று கூறினார்.

வழக்கு தொடுத்த மீனாட்சி லேகி எம்.பி. கூறும்போது, ராகுல் காந்தி சொன்னது பொய் என்பது வெளியானதில் எனக்கு திருப்தி. ஆனாலும் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு