தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை சந்திக்க தமிழக காங்கிரஸ் தலைவர், எம்.பி.க்கள் டெல்லியில் முகாம்

ராகுல் காந்தியை சந்திக்க தமிழக காங்கிரஸ் தலைவர், எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு படுதோல்வி என்றாலும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களை வென்று இருக்கிறது. காங்கிரசுக்கு மட்டும் 8 இடங்கள் கிடைத்திருக்கிறது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எம்.பி.க்கள் மாணிக்தாகூர், எச்.வசந்தகுமார், ஜெயகுமார் ஆகியோர் ராகுல் காந்தியிடம் வாழ்த்து பெறுவதற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர்.

ஆனால் ராகுல் காந்தியை சந்திக்க இன்னும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் காத்திருந்து ராகுல் காந்தியை சந்திப்பதற்காக அவர்கள் டெல்லியிலேயே முகாமிட்டு உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை அவர்கள் சந்தித்து பேசினார்கள். கே.எஸ்.அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால் மட்டுமே தொடர்ந்து வழிநடத்த முடியும் என்பதை வலியுறுத்துவதற்காகவே வந்திருக்கிறோம். இந்த தோல்வி சிறு சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல என்றார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்