தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்

காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்தையும் விட்டு வைக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.

தினத்தந்தி

சுந்தர் நகர்,

இமாசல பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்நகர், காங்ரா ஆகிய இடங்களில் பா.ஜனதா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. அடுத்து பினாமி சொத்துகள் மீது நான் நடவடிக்கை எடுக்க போகிறேன் என்பதை முன்பே அறிந்துதான் அவர்கள் எனக்கு எதிராக இப்போதே பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

நீங்கள்(காங்கிரஸ்) தலைவர்கள் ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடித்த சொத்துகள் அனைத்தையும் திருப்பித் தரவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த விஷயத்தில் அவர்கள் உள்பட யாரும் தப்பி விட முடியாத அளவிற்கு ஒரு நிலையை ஏற்படுத்துவேன் என்றார்.

தற்போது பினாமி சொத்து சட்டத்தின்கீழ் மோடி நடவடிக்கை எடுக்க போகிறார் என்பது அவர்களுக்கு தெரிகிறது. பினாமி பெயர்களில் அவர்கள் பதுக்கி வைத்துள்ள நிலம், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் எதையும் எனது அரசு நடவடிக்கை விட்டு வைக்காது.

பினாமி சொத்துகளை அந்த தலைவர்கள் திரும்ப பெற முடியாத நிலையை உருவாக்குவேன். ஏனென்றால் இது மக்கள் பணம். தங்களது சொந்த நலனுக்காக மக்களிடம் இருந்து அவர்கள் கொள்ளையடித்த பணம். 2014-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதற்காகத்தான் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தனர். எனவே, அதை தொடர்ந்து செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்