தேசிய செய்திகள்

காஷ்மீர் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சை நினைத்து காங்கிரசார் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா

காஷ்மீர் பற்றிய ராகுல் காந்தியின் பேச்சை நினைத்து காங்கிரசார் வெட்கப்பட வேண்டும் என்று அமித்ஷா கடுமையாக விமர்சித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் சில்வசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியலமைப்பு 370- பிரிவை மோடி அரசு நீக்கியதை மக்கள் வரவேற்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது.

ராகுல் காந்தி என்ன பேசினாலும் அதை பாகிஸ்தான் புகழ்கிறது. ஐ.நா.வில் அளித்த கடிதத்தில் கூட பாகிஸ்தான் ராகுல் காந்தியின் பேச்சைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கும் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான 370 பிரிவை நீக்கியபின்புதான், அங்கு வளர்ச்சிக்கு வழிஏற்பட்டு, பயங்கரவாதம் சவப்பெட்டியில் அடைக்கப்பட்டு கடைசி ஆணி அடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுமையாக இந்தியாவுடன் இணைந்துவிட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்