பெங்களூரு,
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில், பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுப்பதற்காக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தில் உள்ள சொசுகு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்து சேர்ந்தனர். இன்று சட்டசபைக்கு வந்து பதவி ஏற்று கொண்டனர். இது வரை 193 எம்.எல்.ஏக்கள் பதவி ஏற்று கொண்டனர். பின்னர் சட்டசபை 3.30 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், காணாமல் போனார் என கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா போலீஸ் பாதுகாப்புடன் சட்டப்பேரவைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார்.
இதுபற்றி செய்தியளார்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரான டி.கே. சிவகுமார், அவர் பதவியேற்று கொண்டு காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்திடுவார் என கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன் முதல் மந்திரி ராஜினாமா செய்வது உறுதி என்றும் சிவகுமார் கூறியுள்ளார்.