தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுபைர் கான் காலமானார்

சுபைர் கானின் மறைவு காரணமாக ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 65 ஆக குறைந்துள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் அல்வாரின் ராம்கர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுபைர் கான் (வயது 61) இன்று காலை அல்வாரில் காலமானார். அவர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 5.50 மணியளவில் அவர் காலமானதாக கானின் மனைவி சபியா சுபைர் தெரிவித்தார்.

சுபைர் கானின் மறைவுக்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், ராகுல் காந்தி, காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கானின் மறைவு காரணமாக சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 65 ஆக குறைந்துள்ளது.

200 பேர் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் இப்போது ஏழு இருக்கைகள் காலியாக உள்ளன. ஒரு பாஜக எம்.எல்.ஏ. சில காலத்திற்கு முன்பு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு