புதுடெல்லி,
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (வயது 70) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். கொரேனா பாதிப்பு காரணமாக வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியலிலும், வர்த்தக உலகிலும் தனது பெயரை நிலை நாட்டியவர் வசந்தகுமார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.