புதுடெல்லி,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று தெரிவித்தார்.