தேசிய செய்திகள்

மனோகர் பாரிக்கரிடம் ரபேல் குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை ராகுல்காந்தி விளக்கம்

கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரிடம் எந்த விவாதமும் நடத்தவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி ரபேல் விவகாரத்தில் அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி கொடுத்துள்ளார். நாங்கள் இந்த பிரச்சனையை ஒரு வருடமாக எழுப்பி வருகிறோம்.

இப்போது பிரதமர் பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்த ஒரு அறிக்கை வந்துள்ளது.

பிரதமர் மோடி தனியாக பேசி உள்ளார் என கூறப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பொய்யான தகவல்களை அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலையீடு காரணமாகவே தான் அனில் அம்பானியை தேர்வு செய்ததாக முன்னாள் பிரான்ஸ் அதிபரே கூறி உள்ளார்.

நான் மனோகர்பாரிக்கர்ஜியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தேன். ரபேல் குறித்து எந்த விவாதமும் அவரிடம் நடத்தவில்லை.

அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகவே அவரை நேரில் சந்தித்தேன். மரியாதை நிமித்தமாகவே இந்த சந்திப்பு நடைபெற்றது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை