தேசிய செய்திகள்

அவை நடவடிக்கையை செல்போனில் படம் பிடித்த அனுராக் தாகூருக்கு சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை

அவை நடவடிக்கையை செல்போனில் படம் பிடித்த அனுராக் தாகூருக்கு சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, பாஜகவைச்சேர்ந்த எம்.பி அனுராக் தாகூர் தனது செல்போனில் எதிர்க்கட்சிகள்

அமளியில் ஈடுபட்டதை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இது அவை விதிகளை மீறிய செயல் எனவும், அனுராக் தாகூருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த விவகாரம் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கவனத்துக்கு எடுத்துசெல்லப்பட்டது. இதையடுத்து, அவை விதிமுறைகளை மீறி செயல்பட்ட அனுராக்தாகூருக்கு சுமித்ரா மகாஜன் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, தனது தவறை ஒப்புக்கொண்ட அனுராக் தாகூர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்