தேசிய செய்திகள்

எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது

எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெங்களூரு,

மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத்துடன் ஏற்பட்ட கருத்து மோதலால் இளம் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் கட்சியில் இருந்து விலகினார். அவர்கள் அனைவரும் பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ரெசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா பா.ஜனதாவில் இணைந்தார்.

ரெசார்ட்டில் தங்கியுள்ள மத்திய பிரதேச எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான திக்விஜய் சிங், டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரசார் நேற்று ரெசார்ட்டுக்கு சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் திக்விஜய் சிங், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரசார் தர்ணா போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து திக்விஜய் சிங், டி.கே.சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களை போலீசார் விடுவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்