தேசிய செய்திகள்

370-வது பிரிவு பற்றிய திக்விஜய்சிங் கருத்துக்கு காங்கிரஸ் தலைமை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்; ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தல்

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிப்பு ஆகியவை மறுஆய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியிருந்தார். சர்ச்சை ஏற்படுத்திய இக்கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்தது.

தினத்தந்தி

இந்தநிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

370-வது பிரிவு பற்றிய நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் தலைமை ஒரு நாளுக்கு மேல் மவுனம் சாதித்து வருகிறது. திக்விஜய்சிங் சூசகமாக தெரிவித்தபடி, 370-வது பிரிவை மீண்டும் அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறதா? மவுனமாக இருக்க வேண்டிய நேரம் முடிந்துவிட்டது. உங்கள் தெளிவான நிலைப்பாட்டை விளக்குங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்