புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வருகிற 9-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்ட்பு மனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.
என்.ஆர். காங்கிரஸ் -பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிவாகி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தநிலையில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் முடிந்துள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியானது. காங்கிரஸ் 16, திமுக -12, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தல ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காங். குழு உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ஜெகத்ரட்சகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
புதுச்சேரியில் காங்கிரஸ் 16 தொகுதிகள், திமுக 14 தொகுதிகள் போட்டியிடும். விசிக, கம்யூனிஸ்டுக்கு தொகுதிகளை திமுக அளிக்கும் என்றார்.
புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விசிக கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினைகளே இன்னும் தீராத நிலையில் தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்து இருப்பது புதுச்சேரி அரசியலில் புதுமையான குழப்பத்தையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.