தேசிய செய்திகள்

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற இருக்கிறது.

தினத்தந்தி

இந்த உறுப்பினர் சேர்க்கை நவம்பர் 1-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி நிறைவு அடையும். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், வார்டுகளிலும், கிராமங்களிலும் சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.

முதல்முறை வாக்காளர்களை கட்சியில் உறுப்பினர்கள் ஆக்குவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் நவம்பர் 14-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு