தேசிய செய்திகள்

எப்போது திருமணம்? ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பிய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்

எப்போது திருமணம் செய்து கொள்வீர் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் சேம்பர் ஆஃப் காமர்ஸ் 112-வது வருடாந்திர கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

நான் உடற்பயிற்சி மேற்கொள்வேன், ஓடுவேன் என இது குறித்து கூட்டத்தில் பேச மாட்டேன். விளையாட்டு என் வாழ்க்கையில் முக்கியம். எங்கள் அரசாங்கத்தின் இறுதி நாட்களில் குறைபாடுகள் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வரும் காங்கிரஸின் புதிய அரசாங்கம் மிகவும் பரவலாக்கப்பட்ட அரசாங்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குத்துச்சண்டை வீரர் விஜேந்திர் சிங் ராகுல் காந்தியிடம் எப்போது திருமணம் செய்துகொள்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, நடக்கும் போது அது நடக்கும். நான் விதியை நம்புகிறேன்.

இவ்வாறு பதில் அளித்தார்.