தேசிய செய்திகள்

கர்நாடகாவில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெறும் - சித்தராமையா

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கர்நாடத்தில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதை முதல்-மந்திரி சித்தராமையா முற்றிலுமாக நிராகரித்துள்ளார். காங்கிரஸ் குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் நல்ல மழை பெய்துள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மழை அதிகமாக பெய்யும்போது, பிரச்சினைகள் உண்டாகிறது.சாலை பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். முன்னதாக, இது மோடியின் ஊடக கருத்துக்கணிப்பு என்று ராகுலும், நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 295 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கார்கே கூறியிருந்தார். நான் அதை ஆதரிக்கிறேன்.கர்நாடகத்தில் எங்கள் கட்சி குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்