தேசிய செய்திகள்

கர்நாடக மந்திரி இல்லத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை:காங்.கட்சியினர் போராட்டம்

கர்நாடக மந்திரி சிவக்குமார் இல்லத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அடைக்கலம் கொடுத்த கர்நாடக மந்திரி சிவக்குமார் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 64 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் ரூ.10 கோடி மற்றும் ஏராளமான நகைகள், ஆவணங்கள் சிக்கின. 2-வது நாளாக இன்று சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வருமான வரித்துறை சோதனை நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.