தேசிய செய்திகள்

சதி திட்டம்: 4 பயங்கரவாதிகளுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட மற்றும் மத்திய அரசுக்கு எதிரான போரில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முகமது ஷபி ஷா என்ற டாக்டர், தலீப் லாலி, முசாபர் அகமது மற்றும் முஷ்டாக் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், இதுபற்றிய வழக்கு டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதி பிரவீண் சிங் அளித்த தீர்ப்பில், முகமது ஷபி ஷா மற்றும் முசாபர் அகமது ஆகிய இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார். இதேபோன்று, மற்ற இருவர்களான தலீப் லாலி மற்றும் முஷ்டாக் அகமது ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்