உமைம்(மேகலாயா),
ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்த் நாடு முழுவதும் சென்று எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் மேகாலயா மாநிலம் சென்ற ராம்நாத் கோவிந்த் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராம்நாத்கோவிந்த் கூறுகையில், நிர்வாகத்தை பொறுத்தவரை இந்திய அரசியல் அமைப்பே உச்சமானது. எனவே, அரசியல் அமைப்பை பேணிக்காப்பது ஜனாதிபதி மட்டும் அல்லாது ஒவ்வொரு குடிமகனின் புனிதமான பணி ஆகும் என்றார்.