தேசிய செய்திகள்

ஒப்புதல் கோரி அயோத்தி மசூதிக்கான கட்டுமான திட்ட வரைபடம் தாக்கல்

மசூதி கட்டுவதற்கு ஒப்புதல் கோரி அயோத்தி மசூதிக்கான கட்டுமான திட்ட வரைபடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அயோத்தி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக தானிபூர் கிராமத்தில் உத்தரபிரதேச அரசு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கிக் கொடுத்தது.

அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு ஒப்புதல் கோரி, அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் மசூதி கட்டுமான திட்ட வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய-இ்ஸ்லாமிய கலாசார அறக்கட்டளை உறுப்பினர் அப்சல் அகமதுகான் அதை அதிகாரிகளிடம் அளித்தார். பரிசீலனை கட்டணமாக ரூ.89 ஆயிரம் செலுத்தினார்.

ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமரும்வகையில் மசூதி கட்டப்படுகிறது. இந்த திட்டத்தில், 300 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி, சமுதாய சமையல் கூடம், ஆராய்ச்சி மையம் ஆகியவையும் கட்டப்படுகின்றன.

SCROLL FOR NEXT