தேசிய செய்திகள்

தொடர் மழை: இடுக்கி அணை இன்று திறப்பு

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின.

இடுக்கி மாவட்டத்தில் பெய்யும் கனமழை மற்றும் முல்லைபெரியாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், முழுவதும் இடுக்கி அணைக்கு செல்கிறது. இதன் காரணமாக இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக இடுக்கி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வினாடிக்கு 500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் முல்லை பெரியாறு கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்