தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, போலீஸ் ஒருவர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரில் நேற்று இரவு நடைபெற்ற என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பந்தா சவுக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிஆர்பிஎப் வீரர்களுடன் சேர்ந்து போலீசார் நேற்று இரவு அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் போலீசார் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அப்பகுதியில் மேலும், பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...