தேசிய செய்திகள்

ஸ்ரீநகர் மருத்துவமனை வெளியே போலீஸ் சுட்டுக்கொலை, பாக்.பயங்கரவாதி தப்பி ஓட்டம்

ஸ்ரீநகர் மருத்துவமனை வளாகம் அருகே பயங்காவாதியை சிகிச்சைக்கு அழைத்து வந்த போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் எஸ்.எம்.எச்.எஸ் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவனைக்கு இன்று பயங்கரவாதி ஒருவனுக்கு சிகிச்சை அளிக்க போலீசார் அழைத்து வந்தனர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியை போலீஸ் பிடியில் இருந்து தப்ப வைக்க சதித்திட்டம் தீட்டியிருந்த பயங்கரவாதிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் போலீஸ் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சூழலை பயன்படுத்தி, பாகிஸ்தான் பயங்கரவாதி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடினான். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், படுகாயம் படைந்த ஒரு போலீஸ் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துப்பாக்கிச்சூடு நடத்தி, போலீஸ் பிடியில் இருந்து பயங்கரவாதியை தப்ப உதவிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் ரைபிள் ஒன்றையும் பயங்கரவாதி எடுத்துச்சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திய பாதுகாப்பு படையினர், தப்பி ஓடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு