விசாகப்பட்டினம்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சாபில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா ரந்தீப் குலேரியாவிற்கு சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது. அங்கு செய்தியாளாகளிடம் அவர் பேசியதாவது;-
கொரோனா பெருந்தொற்றின் பரவல், இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இருப்பினும், 2-வது அலையைப் போன்று 3-வது அலை மோசமானதாக இருக்காது. 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவாகள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், பெரியவாகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா, குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
ஏற்கெனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கொரோனா தொற்று தாக்கியதாக செரோ ஆய்வு முடிவு கூறுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும். அதன் பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பதில் தடுப்பூசி பெரும் பங்காற்றுகிறது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது தீவிரமான பாதிப்பாக இருக்காது. கொரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றுகிறது. இப்போதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவாகளே. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடாந்து கூறுகிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.