மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் ஆயிரத்திற்கும் கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 35 ஆயிரத்து 453 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 77,21,109 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 15 ஆயிரத்து 140 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 73 லட்சத்து 67 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 07 ஆயிரத்து 350 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.