கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா; 2,726 பேர் பலி

இந்தியாவில் கடந்த 75 நாட்களில் குறைந்த அளவாக 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்த வகையில் 8வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

நேற்று 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், மேலும் 3,921 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 75 நாட்களில் குறைந்த அளவாக புதிதாக 60 ஆயிரத்து 471 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,726 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 9,13,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு